Home Video ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – முன்னோட்டம் வெளியீடு!

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – முன்னோட்டம் வெளியீடு!

1050
0
SHARE
Ad

EVT The Farm 7கோலாலம்பூர் – மலேசிய சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் மலேசியத் திரைப்படமான ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் இன்று வெள்ளிக்கிழமை வெளியானது.

வரும் செப்டம்பர் 28-ம் தேதி, மலேசியா முழுவதும் வெளியீடு காணவிருக்கும் இத்திரைப்படத்தை கார்த்திக் ஷாமலன் இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காண்பதற்கு முன்பே, இதுவரை தமிழ்த் திரைப்படங்கள் சென்றிடாத 3 அனைத்துலக திரைப்பட விழாக்களில் இடம்பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

2016- ல் பியூரெட்டோ ரிக்கோ ஹாரர் திரைப்பட விழாவிலும், மசாக்ரே என் சோகோ திரைப்படவிழாவிலும், 2017-ல் யெல்லோ ஃபீவர் இண்டி பிலிம் திரைப்பட விழாவிலும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்று பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரைப்படத்தின் புதிய முன்னோட்டத்தைக் கீழ்காணும் இணைப்பின் வழியாகக் காணலாம்:

https://www.facebook.com/EVTthemovie/videos/1458727684205465/