சென்னை – ‘ஸ்மூல்’ என்ற செயலியின் மூலம் இருவர் சேர்ந்து டூயட் பாடல்களைப் பாடுவது தற்போது புதிய இளைஞர்களிடம் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றது.
ஒரு பிரபல பாடலின் பின்னணி இசை ஒலிக்க அதற்கு ஏற்ப ஜோடியாகக் குரல் கொடுப்பது தான் ஸ்மூல் செயலியில் உள்ள வசதி.
தற்போது இச்செயலியில் இளையராஜாவின் பாடல்களைப் பாடத் தடை விதிக்கும் படி, இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் ஸ்மூல் செயலி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
அனுமதியின்றி இளையராஜாவின் பாடல்களைப் பாடுவது காப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது எனவே, இளையராஜாவின் பாடல்களை ஸ்மூலின் தரவிலிருந்து நீக்கும் படி பிரதீப் குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.