Home உலகம் 25 ஆண்டுகள் போராட்டதிற்குத் தீர்வு: சவுதி பெண்கள் கார் ஓட்ட அனுமதி!

25 ஆண்டுகள் போராட்டதிற்குத் தீர்வு: சவுதி பெண்கள் கார் ஓட்ட அனுமதி!

848
0
SHARE
Ad

Saudi girls drivingரியாத் – சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்பது பாரம்பரியமாக அந்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஆனால் அதனை எதிர்த்து சவுதி போராட்டவாதிகள் கடந்த 25 ஆண்டுகாலப் போராடி வந்தனர்.

இந்நிலையில் அவர்களின் போராட்டத்திற்குத் தற்போது தீர்வு கிடைத்திருக்கிறது. ஆம்.. இனி சவுதி பெண்கள் கார் ஓட்டலாம்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை, சவுதி மன்னர் சல்மான், சவுதியின் இத்தனை ஆண்டுகால பாரம்பரிய வழக்கத்தை உடைத்து, சவுதி பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கியிருக்கிறார்.