Home நாடு ‘இது தலிபான் மாநிலம் கிடையாது’ – ஜோகூர் சுல்தான் கண்டனம்!

‘இது தலிபான் மாநிலம் கிடையாது’ – ஜோகூர் சுல்தான் கண்டனம்!

1278
0
SHARE
Ad

sultan-johor1ஜோகூர் பாரு – மூவாரில் சர்ச்சைக்குள்ளான ‘முஸ்லிம் மட்டும்’ லாண்டரிக் கடை உடனடியாக தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் அக்கடையை மூட வேண்டும் என்றும் ஜோகூர் சுல்தான் உத்தரவிட்டிருக்கிறார்.

“என்னால் இந்த முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது ஜோகூர், எல்லா இனங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் பொதுவானது. இது ஒரு வளர்ச்சியடைந்த, நாகரீக மற்றும் முன்னேற்றத்தில் செல்லும் மாநிலம்”

“இது ஒரு தலிபான் மாநிலம் கிடையாது. ஜோகூர் இஸ்லாம் தலைவர் என்ற முறையில், இந்த விவகாரத்தைப் பார்க்கும் போது, இது என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில், அடிப்படையில் தீவிரவாதப் போக்காதத் தெரிகிறது” என்று ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் தெரிவித்திருக்கிறார்.