மூவார் – மூவாரில் ‘முஸ்லிம்கள் மட்டும்’ என்ற பெயருடன் நடத்தப்பட்டு வந்த லாண்டரி சேவை (சலவை நிலையம்) இஸ்லாம் அல்லாதவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
நட்பு ஊடகங்களில் நாட்டின் முக்கியத் தலைவர் உட்பட பலரும் அது குறித்து கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், அக்கடை உரிமையாளரின் செயலைக் கண்டித்ததோடு, உடனடியாக அவரது எண்ணத்தை மீட்டுக் கொள்ளும்படி எச்சரித்தார்.
இதனையடுத்து, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி கடை உரிமையாளர், தற்போது ‘முஸ்லிம்கள் மட்டும்’ என்ற கட்டுப்பாட்டை நீக்கிவிட்டு, எல்லோருக்கும் பொதுவானதாக மாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.