Home உலகம் 30 பேரைக் கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட தம்பதி – ரஷியாவில் பயங்கரம்!

30 பேரைக் கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட தம்பதி – ரஷியாவில் பயங்கரம்!

1076
0
SHARE
Ad

RussiaCanibalcoupleமாஸ்கோ – ரஷியாவில் கிட்டத்தட்ட 30 பேரைக் கொன்று அவர்களின் மாமிசங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிட்ட தம்பதியை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

வீதியில் கிடந்த செல்போன் ஒன்றை அவ்வழியே போனவர் ஒருவர் கண்டெடுத்துப் பார்க்க அதில் இருந்த புகைப்படங்கள் அவரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

காரணம், அதில் ஆடவர் ஒருவர் மனித உறுப்புகளை வாயில் கவ்வியபடி இருந்திருக்கிறார். உடனடியாக அந்த செல்போனை காவல்துறையில் ஒப்படைத்திருக்கிறார் அந்நபர்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர் காவல்துறை நடத்திய விசாரணையில், கிராஸ்னோடார் நகரை சேர்ந்த கணவன்-மனைவியான டிமிட்டிரி பக்‌ஷீவ், நட்டாலியா பக்‌ஷீவ் ஆகிய இருவரும் பலரிடம் நண்பர்களாகப் பழகி, அவர்களைத் தங்களது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து, அதில் மயக்க மருந்துகளைக் கொடுத்துக் கொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

மயக்க நிலையில் இருக்கும் போதே அவர்களது தோலை உரித்து கொலை செய்து உடல் உறுப்புகளை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிட்டு வந்தது தெரியவந்தது.

தற்போது ரஷியாவில் இந்த விவகாரம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.