Home நாடு சபா வாரிசான் கட்சி உதவித் தலைவர் கைது

சபா வாரிசான் கட்சி உதவித் தலைவர் கைது

1110
0
SHARE
Ad

parti-warisan-sabah-logoகோத்தாகினபாலு – அதிரடியாக அடுத்தடுத்து ஊழல் புகார்கள் தொடர்பில் பலரைக் கைது செய்து வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நேற்று வியாழக்கிழமை பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் உதவித் தலைவரான பீட்டர் அந்தோணியைக் கைது செய்தது.

சபாவில் மேற்கொள்ளப்பட்ட கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களில் இருந்து பல மில்லியன் ரிங்கிட் கையாடல் செய்யப்பட்டிருக்கிறது என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அதன் தொடர்பிலான விசாரணைக்காக பீட்டர் அந்தோணியை ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்திருக்கிறது.

கோத்தாகினபாலுவில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தந்தபோது பீட்டர் அந்தோணி கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

வாரிசான் கட்சி, அம்னோவிலிருந்து விலகிய அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் ஷாபி அப்டால் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சியாகும்.

மேற்கூறப்பட்ட புகார்கள் தொடர்பில், 15 வெவ்வேறு இடங்களில் நடத்திய விசாரணைகளின் வழி இதுவரை சுமார் 150 மில்லியன் ரிங்கிட் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

ஊழல் தடுப்பு ஆணையம் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமே குறிவைத்துச் செயல்படுகிறது என புகார்கள் எழுந்து வரும் வேளையில், இந்தக் கைது நடவடிக்கையும் அம்னோவிலிருந்து விலகிய தலைவர் ஒருவரைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அம்னோவின் உதவித் தலைவராக இருந்த டத்தோ ஷாபி அப்டால் பார்ட்டி வாரிசான் சபா என்ற தனிக் கட்சியைத் தோற்றுவித்திருக்கிறார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கும், அம்னோவுக்கும் இந்தக் கட்சி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.