Home நாடு ஜாமிஹான் மட் ஜின் விடுதலை

ஜாமிஹான் மட் ஜின் விடுதலை

957
0
SHARE
Ad

Zamihan_Mat_Zinகோலாலம்பூர் – ஜோகூர் சுல்தானுக்கு எதிராகவும், சீனர்களுக்கு எதிராகவும் கருத்துகள் தெரிவித்ததற்காகக் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட இஸ்லாமிய மதபோதகர் ஜாமிஹான் மட் ஜின் காவல் துறையின் பிணை அடிப்படையில் (போலீஸ் ஜாமீன்) இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

இந்தத் தகவலை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு இலாகாவின் இயக்குநர் ஆணையர் (கமிஷனர்) டத்தோஸ்ரீ வான் அகமட் நஜ்முடின் முகமட் வெளியிட்டிருக்கிறார். ஜமிஹானின் தடுப்புக் காவலுக்கான நீதிமன்ற உத்தரவு முடிவுக்கு வந்ததை அடுத்து, அவர் விடுதலை செய்யப்படுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பிலான புலன் விசாரணைகள் முடிவடைந்ததும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திடம் மேல் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஜாமிஹான் கோலாலம்பூர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மூவாரில் இயங்கும் தானியங்கி சலவை இயந்திர மையம் ஒன்று முஸ்லீம்களுக்கு மட்டும் என்ற நிபந்தனையோடு செயல்பட்ட காரணத்தால் எழுந்த சர்ச்சையில் ஜாமிஹான் உதிர்த்த கருத்துகளின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.