Home நாடு சபா ஊழல்: இன்னொரு கைது!

சபா ஊழல்: இன்னொரு கைது!

701
0
SHARE
Ad

MACCகோத்தா கினபாலு – 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் சபாவில் நடைபெற்றதாக எழுந்துள்ள  புகார்களைத் தொடர்ந்து மற்றொரு சபா பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஷாபி அப்டாலின் சகோதரர் ஹாமிட் அப்டாலின் மருமகன் எனக் கூறப்படுகிறது.

33 வயதான அந்த வணிகர் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கோத்தாகினபாலுவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டார்.

ஷாபி அப்டாலின் சகோதரர் ஹாமிட் அப்டாலின் மூத்த மகளை இன்று கைது செய்யப்பட்ட வணிகர் திருமணம் செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தக் கைது நடவடிக்கையை ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். எனினும் மேல் விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

இன்றைய கைதோடு, இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.