Home நாடு முன்னாள் போக்குவரத்து துணை இயக்குநருக்கு 2000 ரிங்கிட் அபராதம்!

முன்னாள் போக்குவரத்து துணை இயக்குநருக்கு 2000 ரிங்கிட் அபராதம்!

856
0
SHARE
Ad

Datuk-Yusoff-Ayobகோலாலம்பூர் – போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த முன்னாள் துணை இயக்குநர் ஒருவருக்கு, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 2,000 ரிங்கிட் அபராதம் விதித்தது நீதிமன்றம்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, மாலை 6.27 மணியளவில், புத்ராஜெயா லிங்காரானில், பிஎல்ஒய் 68 என்ற எண் கொண்ட காரை ஓட்டிய டத்தோ யூசோப் ஆயோப், போக்குவத்து விதியை மீறி அவசர வழியில் சென்றதாக அவர் மீது கடந்த ஜூலை 18-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1959, சட்டம் 53 (1)-ன் கீழ் 2000 ரிங்கிட் அபராதமோ அல்லது 6 மாத சிறைத் தண்டனையோ விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, அவர் 2000 ரிங்கிட் அபராதத்தை உடனடியாகச் செலுத்தினார்.