Home இந்தியா அரசைப் புகழ்ந்து ஆவணப்படம் தான் எடுக்க முடியும்: ப.சிதம்பரம் கிண்டல்

அரசைப் புகழ்ந்து ஆவணப்படம் தான் எடுக்க முடியும்: ப.சிதம்பரம் கிண்டல்

1119
0
SHARE
Ad

Chidambaramபுதுடெல்லி – ‘மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அரசுக்கு எதிரான கருத்துகளுக்கு எழுந்திருக்கும் கடும் விமர்சனங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர், சர்ச்சைக்குரிய கருத்துகள் இல்லாத படங்கள் எடுக்க வேண்டுமானால் இனி மத்திய அரசைப் புகழ்ந்து ஆவணப்படம் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் ப.சிதம்பரம், “மெர்சலில் இடம்பெற்றுள்ள வசனங்களை நீக்க வேண்டுமென பாஜக வலியுறுத்துகிறது. கற்பனை செய்து பாருங்கள் இன்று பராசக்தி திரைப்படம் வெளியானால் என்னாகுமென்று?. படத் தயாரிப்பாளர்களே கவனத்தில் கொள்ளுங்கள் சட்டம் வருகிறது. இனி அரசின் கொள்கைகளைப் புகழ்ந்து ஆவணப்படங்கள் மட்டுமே எடுக்க முடியும்” என்று சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.