Home நாடு ஜோ லோவை அம்னோ தற்காக்கிறது – முக்ரிஸ் குற்றச்சாட்டு!

ஜோ லோவை அம்னோ தற்காக்கிறது – முக்ரிஸ் குற்றச்சாட்டு!

828
0
SHARE
Ad

Mukhriz Mahathirகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடையதாக நம்பப்பட்டு இண்டர்போல் உதவியோடு தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவை, அம்னோ தலைவர்கள் பாதுகாப்பதாக, பக்காத்தான் ஹராப்பான் உதவித்தலைவர் முக்ரிஸ் மகாதீர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

நேற்று புதன்கிழமை இரவு கருத்தரங்கு ஒன்றில் முக்ரிஸ் பேசுகையில், “ஜோ லோவைத் தேடுவதை காவல்துறை நிறுத்திக் கொண்டுவிட்டதாக துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி அண்மையில் தெரிவித்திருக்கிறார். ஜோ லோவின் மீது எந்த ஒரு வழக்கும் இல்லையென்று சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார். இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், மக்கள் பணத்தை திருடிய ஜோ லோ, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், இன்னும் அவரை அம்னோ தற்காத்து வருவதாகவும் முக்ரிஸ் சுட்டிக் காட்டியிருக்கிறார்.