Home உலகம் பாலியல் புகார்: ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மன்னிப்பு கோரினார்!

பாலியல் புகார்: ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மன்னிப்பு கோரினார்!

1135
0
SHARE
Ad

George H.W. Bushவாஷிங்டன் – நடிகை ஹெதர் லிண்ட் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் (வயது 93) மன்னிப்புக் கேட்பதாக புஷ்சின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

“சுமார் 5 ஆண்டுகளாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்சுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது, அவரது அருகில் நிற்பவரின் பின்பக்கத்தில் அவரது கை படுவது இயல்பு தான்”

“அது நிச்சயமாக நல்ல எண்ணத்தோடு தான். அதுமட்டுமின்றி தன்னைப் பார்க்க வருபவர்களை ஆசுவாசப்படுத்த புஷ், சில நகைச்சுவைகளைச் சொல்வதும் வழக்கமான ஒன்று தான். என்றாலும் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் கேட்ட புஷ், தனது செயல் யாரையாவது எரிச்சலூட்டியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்” என்று ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்சின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.