Home நாடு ஊழல் வழக்கால் ஷாபி அப்டால் செல்வாக்கு சரிந்ததா?

ஊழல் வழக்கால் ஷாபி அப்டால் செல்வாக்கு சரிந்ததா?

991
0
SHARE
Ad

shafie-apdal-கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டு 8 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் நேற்று வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கோத்தாகினபாலு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் 1 இலட்சம் ரிங்கிட் பிணையில் (ஜாமீன்) விடுதலை செய்யப்பட்ட ஷாபி அப்டால், தனது அரசியல் போராட்டம் தளராது தொடரும் என சூளுரைத்தார்.

விடுதலை செய்யப்பட்டாலும், அடுத்த வாரத்தில் அவர் நீதிமன்றத்தில் ஊழல் தொடர்பில் குற்றம் சாட்டப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

முதல் கட்டமாக தனது உடல் நிலை குறித்து பரிசோதனைகள் செய்யப் போவதாகக் கூறிய ஷாபி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தருணத்தில் தனது இரத்த அழுத்தம் அளவுக்கு மீறி உயர்ந்ததாகவும், இதனால் தனது உடல் நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

சபா வாரிசான் கட்சியின் தலைவரான ஷாபி அப்டாலின் அரசியல் செல்வாக்கு இந்த ஊழல் வழக்கினாலும், அவர் கைது செய்யப்பட்டதாலும் சரிந்துள்ளதா அல்லது அவர் மீதான அனுதாபத்தினால் அவர் மீதான செல்வாக்கும், ஆதரவும் அதிகரித்துள்ளதா என அரசியல் அரங்கில் விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

ஊழல் புகார்களினால் ஷாபியின் செல்வாக்கு சரிந்துள்ளதாக ஒரு சாரார் வாதிடுகின்றனர். இன்னொரு சாரார், ஷாபி அம்னோவில் அமைச்சராக இருந்த போது நிகழ்ந்த ஊழல் இது என்பதால், இதன் மூலம் அம்னோவின் செல்வாக்கும் பாதிப்படைகிறது எனக் கூறுகின்றனர்.

ஷாபி மீதான இந்த ஊழல் வழக்கு பழிவாங்கும் செயல் என்றும் இதனால் வாரிசான் பார்ட்டி சபா கட்சியின் தலைவரான ஷாபி அப்டால் மீதான அனுதாபம் சபாவில் பெருகுகிறது என்றும் இன்னொரு சாரார் வாதிடுகின்றனர்.