Home இந்தியா சுவிஸ் தம்பதி தாக்குதல்: 3 சிறார்கள் உட்பட 5 பேர் கைது!

சுவிஸ் தம்பதி தாக்குதல்: 3 சிறார்கள் உட்பட 5 பேர் கைது!

1278
0
SHARE
Ad

Swisscoupleattackedinindiaபுதுடெல்லி – இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதி, தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்த இரயில் நிலையம் ஒன்றிற்குச் சென்ற போது, அங்கிருந்த கும்பல் ஒன்று அவர்களுடன் தம்படம் எடுக்க வேண்டும் என்று கூறியது.

அதற்கு அவர்கள் மறுக்கவே இருதரப்பிற்கு ஏற்பட்ட தகராறில், அக்கும்பல் சுவிஸ் தம்பதியை கற்களாலும், கட்டையாலும் தாக்கியது.

இதில் கடுமையாகக் காயமடைந்த இருவரும் அப்பகுதியில் இருந்த மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விளக்கமளிக்குமாறு உத்திரப்பிரதேச அரசுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், 3 சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.