ரியாத் – ஞாயிற்றுக்கிழமை மதியம், ஏமன் எல்லை அருகே, நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர்களுள் ஒருவர் காலமானார்.
முன்னாள் பட்டத்து இளவரசர் முக்ரின் அல் சாவுத்தின் மகனான இளவரசர் மான்சோர் பின் முக்ரின் இரண்டு புதிய மசூதிகளின் ஆலோசகராகச் செயல்பட்டு வந்ததோடு, ஆசிரின் ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் சில அரசாங்க அதிகாரிகளுடன் ஏமன் எல்லை அருகே ஹெலிகாப்டரின் சென்று கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி அதிலிருந்து அனைவரும் மரணமடைந்ததாக சவுதி ஊடகங்கள் கூறுகின்றன.
விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
சவுதி அரேபியாவில் புதிதாக அமைக்கப்பட்ட ஊழல் தடுப்புக் குழு, அதிரடியாக அந்நாட்டின் 17 இளவரசர்களையும், மற்றும் முன்னாள் அமைச்சர்கள், நடப்பு அமைச்சர்கள், அதிகாரிகள் எனக் கூட்டமாகக் கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் இச்சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.