Home கலை உலகம் சென்னைத் திரையரங்குகளைக் கலக்கிய ‘அறம்’ நயன்தாரா!

சென்னைத் திரையரங்குகளைக் கலக்கிய ‘அறம்’ நயன்தாரா!

1739
0
SHARE
Ad

nayanthara-aramm-theatre visit-11112017 (1)சென்னை – ‘அறம்’ திரைப்படம் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், இரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், நயன்தாரா கடந்த சனிக்கிழமை (11 நவம்பர் 2017) சென்னையிலுள்ள சில திரையரங்குகளுக்கு நேரடியாக வருகை தந்தார்.

அவருக்கு இரசிகர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

aramm-movie-poster-1கடந்த வாரம் வெளியான ‘அறம்’ திரைப்படம் தமிழ் நாட்டையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. தமிழ் நாட்டின் அரசியல் நிலைமை, கிராமத்தில் நடைபெறும் அவலங்கள், அரசு அதிகாரிகளின் ஒருதலைப் பட்ச போக்கு, நேர்மையாக, அறம் சார்ந்து முடிவெடுக்கும் ஒரு மாவட்ட ஆட்சியாளர், அதற்காக எதிர்நோக்கும் சவால்கள் – என பல்வேறு தளங்களில் சமூக சாடல்களைக் கொண்ட படமாகத் திகழ்கிறது அறம்.

nayanthara-aramm-theatre visit-11112017 (5)
சென்னை திரையரங்கு ஒன்றில் கேக் வெட்டி ‘அறம்’ வெற்றியைக் கொண்டாடும் நயன்தாரா – படத்தின் இயக்குநர் கோபி நயினார் (நீலச் சட்டையில் இருப்பவர்)
#TamilSchoolmychoice

nayanthara-aramm-theatre visit-11112017 (2)இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நயன்தாராவுக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரது சிறந்த நடிப்புக்கான பாராட்டு ஒருபுறம் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில், தனது உச்ச நட்சத்திர அந்தஸ்தை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘அறம்’ மாதிரியான சமூகப் பிரச்சனைகளைப் பேசும் படம் ஒன்றில் நடித்ததற்காகவும் நயன்தாராவுக்கு புகழாரம் சூட்டப்படுகிறது.

nayanthara-aramm-theatre visit-11112017 (3)nayanthara-aramm-theatre visit-11112017 (4)nayanthara-aramm-theatre visit-11112017 (5)