Home நாடு தாமான் ஓயுஜி துப்பாக்கிச் சூடு: குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

தாமான் ஓயுஜி துப்பாக்கிச் சூடு: குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை!

1059
0
SHARE
Ad

Taman oug shootingகோலாலம்பூர் – கடந்த 2016-ம் ஆண்டு, ஜூலை 6-ம் தேதி, தாமான் ஓயுஜி அருகே காரில் சென்று கொண்டிருந்த பெண் தொழிலதிபர் டத்தின் ரெனிசி வோங், மோட்டாரில் வந்த சிலரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இச்சம்பவத்தில் காரில் இருந்த அவரது 8 வயது மகளும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டு காயமடைந்தார்.

இந்நிலையில், இக்கொலை சம்பவத்தில், தொடர்புடையதாக நம்பப்பட்ட எம்.பால் கண்பதி (வயது 27), எஸ்.விஜேந்திரன் (வயது 30), கே.ஸ்ரீ கணபதி (வயது 35), சென் யுயென் மிங் (வயது 42), சின் கோக் லியாங் (வயது 45), கே.சத்தியராவ் (வயது 30) மற்றும் லியூ லாய் சென் (வயது 48) ஆகிய 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

எனினும், அவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்தது.