Home உலகம் எகிப்தில் பயங்கரவாதத் தாக்குதல் – 184 பேர் மரணம்

எகிப்தில் பயங்கரவாதத் தாக்குதல் – 184 பேர் மரணம்

1221
0
SHARE
Ad

Egypt-bir_al_abed-mosque attackகெய்ரோ – எகிப்தின் வட பகுதியில் உள்ள சைனாய் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 184 பேர் உயிரிழந்தனர் என்றும் மேலும் 120-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் சிஎன்என் தொலைக்காட்சி அறிவித்தது.

இதுவரையில் யாரும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருக்கலாம் என்றும், காரணம் சைனாய் பகுதியில் இந்த தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிகுண்டுகள் பள்ளி வாசலில் வெடித்த அதே வேளையில், இன்று வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கி ஏந்திய ஒருவன் சரமாரியாகச் சுட்டான் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

பிர் அல்-அபெட் (Bir Al-Abed) என்ற இடத்திலுள்ள அல் ராவ்டா பள்ளிவாசலைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.