Home இந்தியா ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டி

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மீண்டும் போட்டி

1031
0
SHARE
Ad

TTV Dhinakaranசென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக டிடிவி தினகரன் (படம்) அறிவித்திருக்கிறார்.

இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே முதல் வேட்பாளராக டிடிவி தினகரன் தன்னை அறிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தப்பட்டபோது ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக மதுசூதனன் போட்டியிட்டார்.

#TamilSchoolmychoice

தற்போது கட்சியின் அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் முதலமைச்சர் பழனிசாமி-பன்னீர் செல்வம் இணைந்த அணிக்கு மீண்டும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் பெரும் பங்காற்றினார். இதன் காரணமாக அவருக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறது. திமுகவுக்கு காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.