கோலாலம்பூர் – எகிப்தில் உள்ள பள்ளிவாசம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை 235 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.
“எகிப்தில் உள்ள அல் ராவ்டா பள்ளிவாசலில் வழிபாடு செய்து கொண்டிருந்த அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நஜிப் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
எகிப்தின் வட பகுதியில் உள்ள சைனாய் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 235 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.