Home நாடு பிரிம் 2018: திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்!

பிரிம் 2018: திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்!

1188
0
SHARE
Ad

BR1Mகோலாலம்பூர் – 2018-ம் ஆண்டிற்கான ஒரே மலேசிய மக்கள் உதவித் தொகையான பிரிமிற்கு, வரும் திங்கட்கிழமை தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நிதியமைச்சு இன்று சனிக்கிழமை அறிவித்தது.

திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 31-ம் தேதி வரையில், குறைந்த வருமானங்களைக் கொண்ட மலேசியர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் நிதியமைச்சு குறிப்பிட்டிருக்கிறது.

பிரிமின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ebr1m.hasil.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவோ அல்லது எல்எச்டிஎன் சேவை மையங்களில் நேரடியாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

#TamilSchoolmychoice