Home உலகம் எகிப்து : மரண எண்ணிக்கை 305 ஆக உயர்ந்தது!

எகிப்து : மரண எண்ணிக்கை 305 ஆக உயர்ந்தது!

1012
0
SHARE
Ad
Egypt-attack-Bir Al-Abed-24112017
தாக்குதலில் பாதிப்படைந்தவர்கள் – படம்: நன்றி – DPA

கெய்ரோ – அனைத்துல அளவில் இதுவரை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களிலேயே மிக மோசமானதாகக் கருதப்படும் சைனாய் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305 ஆக அதிகரித்தது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 128 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பள்ளிவாசல் எகிப்தின் வட பகுதியில் அமைந்துள்ளது.

டாயிஷ் (Daesh) என்ற இயக்கத்தைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள்  வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, பள்ளி வாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தியவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் மரணமடைந்தனர்.

#TamilSchoolmychoice

பிர் அல்-அபெட் (Bir Al-Abed) என்ற இடத்திலுள்ள அல் ராவ்டா பள்ளிவாசலைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

மரணமடைந்தவர்களில் 27 சிறுவயதுக் குழந்தைகளும் அடங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்தபடி, 25 முதல் 30 எண்ணிக்கையிலான துப்பாக்கிய ஏந்திய பயங்கரவாதிகள் ஐந்து வாகனங்களில் வந்து பள்ளிவாசலில் தொழுகை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.