Home கலை உலகம் இந்தி நடிகர் சசி கபூர் காலமானார்

இந்தி நடிகர் சசி கபூர் காலமானார்

1107
0
SHARE
Ad

Shashi-Kapoorமும்பை – இந்திப் படவுலகின் முன்னணிக் கதாநாயகனாக விளங்கிய நடிகர் சசி கபூர் தனது 79-வது வயதில் காலமானார்.

148 இந்திப் படங்களில் நடித்திருக்கும் சசி கபூர் மறைந்த நடிகர் ராஜ்கபூரின் இளைய சகோதரர் ஆவார்.

ஜீனத் அமானுடன் சத்யம் சிவம் சுந்தரம், அமிதாப் பச்சனுடன் தீவார், கபி கபி போன்ற பல படங்களில் நடித்த சசி கபூர், ராஜ்கபூர் சகோதரர்களிலேயே மிகவும் அழகானத் தோற்றம் கொண்டவராகக் கருதப்பட்டவர்.

Shashi-Kapoor-1
சசி கபூரின் இளவயதுத் தோற்றம்