Home இந்தியா விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிப்பு

விஷால் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிப்பு

975
0
SHARE
Ad

vishalசென்னை – ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வேட்புமனு சமர்ப்பித்த விஷாலின் வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் விஷாலின் ஆட்சேபங்களை ஏற்றுக் கொண்டு அந்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பின்னர் நேற்றிரவு இன்னொரு திருப்பமாக விஷாலின் வேட்புமனு அதிகாரபூர்வமாக நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

விஷாலுக்கு ஆதரவாக முன்மொழிந்து கையெழுத்திட்ட 10 பேரில் இருவர் நேரடியாக தேர்தல் அதிகாரியின் முன்வந்து நாங்கள் அந்த வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை என கூறியதைத் தொடர்ந்த விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, மற்றொரு சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.