Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரியாக ரியாத் அஸ்மத் நியமனம்!

ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரியாக ரியாத் அஸ்மத் நியமனம்!

918
0
SHARE
Ad

Riad Asmat Air Asiaசிப்பாங் – ஏர் ஆசியா பெர்ஹாட்டின் புதியத் தலைமைச் செயலதிகாரியாக ரியாட் அஸ்மத் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே அப்பதவியில் இருந்த ஐரீன் ஓமார், தற்போது டிஜிட்டல், உருமாற்றம் மற்றும் பெருநிறுவனச் சேவைகள் ஆகிய பிரிவுகளின் துணை குழுமச் தலைமைச் செயலதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

டான்ஸ்ரீ அஸ்மத் கமாலுதினின் மகனான 46 வயது ரியாத், தற்போது ஏர் ஆசியா எக்ஸ் இயக்குநராகச் செயல்பட்டு வருகின்றார்.

#TamilSchoolmychoice

அவர் தனது புதியப் பதவியில் வரும் 2018-ம் ஆண்டு ஜனவரி 10 முதல் செயல்படத் தொடங்குவார் என டோனி அறிவித்தார்.

இந்தப் புதிய பதவி நியமனங்களை ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று புதன்கிழமை அறிவித்தார்.

மேலும், ஏர் ஆசியாவின் தலைமைச் செயலாக்க அதிகாரியாக கேப்டன் அட்ரியான் ஜென்கின்சும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.