Home இந்தியா ராஜஸ்தானில் நடந்தது என்ன? – பெரிய பாண்டியனின் மனைவி கேள்வி!

ராஜஸ்தானில் நடந்தது என்ன? – பெரிய பாண்டியனின் மனைவி கேள்வி!

784
0
SHARE
Ad

Periyapandiyan's wifeசென்னை – ராஜஸ்தானில் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில், அவரது மரணத்தில் இதுவரை பல முன்னுக்குப் பின் முரணானத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

முதலில், நாதுராம் என்ற அந்தக் கொள்ளையன் பெரிய பாண்டியனின் துப்பாக்கியைப் பிடுங்கி அவரையே சுட்டதாகக் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

பின்னர், காவல்துறைத் தனிப்படையில் இருந்த கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி கீழே விழுந்ததால், அதை வைத்து கொள்ளையன் பெரிய பாண்டியனைச் சுட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜஸ்தான் காவல்துறை வெளியிட்ட தகவலில், தவறுதலாக முனிசேகர் தான் பெரிய பாண்டியனைச் சுட்டதாகவும், அதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் அறிவித்தது.

இதனிடையே, கொள்ளையன் நாதுராமின் மனைவியையும் ராஜஸ்தான் காவல்துறைக் கைது செய்திருக்கிறது.

இந்நிலையில், வீரமரணமடைந்த பெரிய பாண்டியனின் மனைவி பானுரேகா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ராஜஸ்தானில் என்ன நடந்தது என்று முனிசேகர் தனது மனசாட்சிக்கு உண்மையாகப் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.