புதுடெல்லி (மலேசிய நேரம் 12 மணி நிலவரப்படி) – குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2017-ன் இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த டிசம்பர் 14-ம் தேதி நடைபெற்றது.
வடக்கு மற்றும் மத்திய குஜராத்திலுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் 851 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதன் முடிவுகள் இன்று திங்கட்கிழமை வெளியாகும். தற்போது குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன் படி, குஜராத்தில் பாஜக 75 இடங்களிலும், காங்கிரஸ் 75 இடங்களிலும் சமமாக உள்ளன. பிற கட்சிகள் 1 இடத்திலும் உள்ளன.
சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் காங்கிரஸ் அபார வாக்குகளைப் பெற்றிருப்பதாக அரசியல் பார்வையாளர்களை தெரிவித்திருக்கின்றனர்.
இமாச்சலப் பிரதேசத்தில், பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான அளவில் 35 தொகுதிகளுக்கும் மேல் பெற்று முன்னிலை வகிக்கின்றது.
காங்கிரஸ் தற்போது 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றது.