புதுடெல்லி – இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்டிரம் வழக்கின் தீர்ப்பு இன்று வியாழக்கிழமை வழங்கப்படவிருக்கிறது.
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படவிருக்கும் இத்தீர்ப்பையடுத்து, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் முக்கியப் பிரமுகர்களான ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகளுமான கனிமொழி, முன்னாள் மத்திய் அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
மேலும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அனைவரும் நீதிமன்றத்திற்கு வந்திருக்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவிருப்பதாகக் கூறப்படுகின்றது.
இவ்வழக்குகளின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்பாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.