Home நாடு மலேசியாவில் வெளியீடு காண்கிறது விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்

மலேசியாவில் வெளியீடு காண்கிறது விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்

1128
0
SHARE
Ad

vibulanantha-adigalar-documentary-banner-26122017கோலாலம்பூர் – இலங்கைத் தமிழறிஞர் விபுலாநந்த அடிகளார் குறித்த ஆவணம் படம் இன்று செவ்வாய்க்கிழமை, கோலாலம்பூரில் வெளியீடு காண்கிறது.

எண்: 150, ஜாலான் சுல்தான் அப்துல் சமாட், பிரிக்பீல்ட்ஸ் என்ற முகவரியிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் இன்று மாலை 7.00 மணிக்கு இந்த ஆவணப் படம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இராமகிருஷ்ண மடத்தின் துறவியாக சேவையாற்றிய  விபுலாநந்த அடிகளார், ‘யாழ் நூல்’ என்ற ஆய்வு நூலைப் படைத்தவர். பன்முக ஆளுமை கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கொழும்பு பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக் கழகங்களின் பேராசிரியராகவும் பணியாற்றியவர் விபுலாநந்த அடிகளார்.

#TamilSchoolmychoice

அவரது வாழ்க்கை வரலாற்றையும் தமிழ்ப் பணிகளையும் கொண்ட 50 நிமிட ஆவணப் படம் உருவாக்கப்பட்டு அந்த ஆவணப் படம் மலேசியாவில் வெளியீடு காண்கிறது.

தமிழ் அன்பர்கள், ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.