சியோல் – நேற்று திங்கட்கிழமை புத்தாண்டு தினத்தில் பேசிய வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தேவைப்பட்டால் தயாராக இருக்கும் அணு ஆயுதத்தை அமெரிக்காவை நோக்கி வீசுவோம் என எச்சரிக்கவிடுத்தார்.
அதேவேளையில், அண்டை நாடாக தென்கொரியாவுடன் நல்லுறவிற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்தார்.
வடகொரியா எப்போது “அமைதியை விரும்பும் நாடு என்பதோடு அணு ஆயுதம் வைத்திருக்கும் பொறுப்பான நாடும் கூட” என கிம் ஜோங் உன் அறிவித்திருக்கிறார்.
தென்கொரிய எல்லையில் அமைதி நிலவ, அங்கு இராணுவப் பதட்டத்தையும் குறைக்கவிரும்புவதாகவும் கிம் ஜோங் உன் குறிப்பிட்டார்.
அதற்கு தென்கொரியாவின் ஒத்துழைப்பும் தேவை என்றும் கிம் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாவைச் சேர்ந்த வீரர்களை அனுப்ப தாங்கள் திட்டமிட்டு வருவதாகவும் கிம் தெரிவித்தார்.