Home நாடு எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?

எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?

1163
0
SHARE
Ad

mahathir-tun-ஷா ஆலாம் – இன்று ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளின் மாநாட்டை நாடு முழுமையிலுமிருந்து அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.

சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கும் இந்த மாநாட்டின் முடிவில் கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் துன் மகாதீர் முகமது தலைமையில் கூடியுள்ளனர்.

pakatan harapan-logoமாலை 5.00 மணியளவில் நிறைவு பெறவிருக்கும் மாநாட்டின் முடிவில் எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படவிருப்பதால், பரபரப்பு மேலும் கூடியுள்ளது.

#TamilSchoolmychoice

அனைத்துத் தரப்புகளும் கணித்திருப்பதைப் போன்று போன்று துன் மகாதீர் பிரதமராகவும், டத்தின்ஸ்ரீ வான் அசிசா துணைப் பிரதமராகவும் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.