Home உலகம் ஆபாச நடிகையுடன் தகாத உறவை மறைக்க டிரம்ப் பணம் கொடுத்தாரா?

ஆபாச நடிகையுடன் தகாத உறவை மறைக்க டிரம்ப் பணம் கொடுத்தாரா?

1024
0
SHARE
Ad

donald-trumpவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடந்த கால வாழ்க்கை தொடர்ந்து ஊடகங்களில் சர்ச்சையாகத் தொடர்ந்து வருகிறது.

ஆகக் கடைசியாக வெளியான தகவலின்படி 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக டிரம்ப்புடன் தகாத உறவு கொண்டிருந்த ஓர் ஆபாச நடிகை அந்தத் தகவலை வெளியிடாமல் மறைக்கும் பொருட்டு அந்த நடிகைக்கு, 130,000 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்தது.

இந்தப் பணம் டிரம்பின் சொந்த வழக்கறிஞர் மூலமாக வழங்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நடிகையின் பெயர் ஸ்டெப்பனி கிளிப்பர்ட் (Stephanie Clifford) என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது. 2016 அக்டோபரில் டிரம்பின் நீண்ட கால வழக்கறிஞர் மைக்கல் கோஹன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தப் பணம் கைமாறியதாகவும் வால் ஸ்ட்ரீட் குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

ஸ்டெப்பனி கிளிப்பர்ட் 2006-ஆம் ஆண்டில் ஒரு கோல்ப் விளையாட்டுப் போட்டியின் போது டிரம்புடன் சந்திப்பு நடத்தியதாகவும் அந்தப் பத்திரிக்கை தெரிவித்தது. டிரம்பின் நடப்பு மனைவி மெலானியை திருமணம் செய்து ஓராண்டு கழிந்த பின்னர்தான் ஸ்டெப்பனி கிளிப்பர்ட்டுனான டிரம்பின் தொடர்பு நிகழ்ந்தது.

எனினும், வெள்ளை மாளிகை இந்தப் புகாரை மறுத்துள்ளது. ஏற்கனவே பல முறை கூறப்பட்ட அதே புகார்கள்தான் மீண்டும் மீண்டும் புதிய வடிவங்களில் வெளியிடப்படுகின்றன என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.