சிங்கப்பூர் – ஜோகூர் பாரு – சிங்கப்பூர் இடையிலான அதிவேகப் போக்குவரத்து அமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் மற்றும் கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா பூன் வான் மற்றும் மலேசியப் பிரதமர் துறை அமைச்சரான அப்துல் ரஹ்மான் டாலான் ஆகிய இருவரும், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
படங்கள்: Msia PM Press Office