Home உலகம் தென்கொரியாவுடன் கூட்டு ஒலிம்பிக் நிகழ்ச்சி இரத்து – வடகொரியா அறிவிப்பு!

தென்கொரியாவுடன் கூட்டு ஒலிம்பிக் நிகழ்ச்சி இரத்து – வடகொரியா அறிவிப்பு!

1013
0
SHARE
Ad

30-kim-jong-un-600சியோல் – வரும் பிப்ரவரி 8-ம் தேதி தென்கொரியாவின் இயோங்சங் நகரில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, தென்கொரியாவுடன் இணைந்து வடகொரிய கலைஞர்கள் பங்கேற்கவிருந்த கலாச்சார நிகழ்ச்சியில் இருந்து வடகொரியா திடீரென பின்வாங்கியிருக்கிறது.

குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் மூலம் வடகொரியா – தென்கொரியா இடையிலான பகை தீர்ந்து நட்புறவு நீடிக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வடகொரியாவின் இந்த அறிவிப்பு தென்கொரியாவை மிகவும் வருத்தமடையச் செய்திருக்கிறது.

குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியாவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, தென்கொரியாவில் பயிற்சிக்காக வடகொரிய வீரர்களை அனுப்பும் பணிகளும் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஊடகங்களின் தவறான விமர்சனங்கள் தான், இம்முடிவு எடுப்பதற்குக் காரணம் என வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.