Home Photo News கையில் காயம் பட்டும் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட ஜோகூர் சுல்தான் (படக் காட்சிகள்)

கையில் காயம் பட்டும் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட ஜோகூர் சுல்தான் (படக் காட்சிகள்)

1152
0
SHARE
Ad

thaipusam-johor baru-sultan johor-31012018 (6)ஜோகூர் பாரு – மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் இன, மத பேதமின்றி ஜோகூர் மாநிலத்தில் எல்லாவிதமான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்.

அந்த வகையில் நேற்று புதன்கிழமை ஜோகூர் பாரு தம்போய் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள ஜோகூர் சுல்தான் வருகை தந்தார்.

thaipusam-johor baru-sultan johor-31012018 (1)தனது கையில் காயம் பட்டிருந்தும் கையில் அந்தக் காயத்தின் கட்டுடன் தைப்பூசத் திருவிழாவுக்கு மரியாதை தந்து கொண்டாட்டங்களில் சுல்தான் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 ஜனவரி 2018) அரண்மனையில் தனது குடும்பத்தினருக்காக உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சுல்தானுக்கு எதிர்பாராதவிதமாக கையில் காயம் ஏற்பட்டதாக, சுல்தானின் அதிகாரபூர்வ அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

thaipusam-johor baru-sultan johor-31012018 (2)தைப்பூசத் திருவிழாவில் நண்பகல் 12 மணியளவில் வருகை தந்த ஜோகூர் சுல்தான் தனது தைப்பூச வருகை குறித்த புகைப்படங்களை தனது அதிகாரபூர்வ அகப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஜோகூர் சுல்தானோடு அவரது புதல்வர் ஜோகூரின் துங்கு தெமங்கோங் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டாரும் தைப்பூசத்திற்கு வருகை தந்தார்.

thaipusam-johor baru-sultan johor-31012018 (3)சுல்தானின் வருகையின்போது ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர்.வித்தியானந்தன், மஇகா ஜோகூர் மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.அசோஜன் ஆகியோரும் உடனிருந்தனர்.

ஆலய நிர்வாகத்தினர் சுல்தானுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மாலை மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட்டன.

thaipusam-johor baru-sultan johor-31012018 (4)தைப்பூசத் திருவிழா வரவேற்புகளில் கலந்து கொண்டதோடு, அங்குள்ள பொதுமக்களோடு அளவளாவியும், நலம் விசாரித்தும், சுல்தான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

thaipusam-johor baru-sultan johor-31012018 (5)thaipusam-johor baru-sultan johor-31012018 (9)thaipusam-johor baru-sultan johor-31012018 (10)thaipusam-johor baru-sultan johor-31012018 (7)(படங்கள்: நன்றி: ஜோகூர் சுல்தான் அதிகாரபூர்வ அகப்பக்கம்)