Home நாடு இந்தியாவில் இருந்து ‘மை’, சபாவில் ஹெலிகாப்டர்கள் முன்பதிவு: பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

இந்தியாவில் இருந்து ‘மை’, சபாவில் ஹெலிகாப்டர்கள் முன்பதிவு: பரபரப்பில் தேர்தல் ஆணையம்!

1324
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்களின் விரலில் தடவப் பயன்படுத்துவதற்காக சுமார் 1 லட்சம் ‘அழியா மை’ குடுவைகளை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்யவிருக்கிறது மலேசியா.

மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஸ் என்ற நிறுவனத்திடம், மலேசியத் தேர்தல் ஆணையம், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தைச் செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் எச்.ஏ.வெங்கடேஸ் கூறியிருப்பதாக ‘டெக்கான் ஹெரால்டு’ செய்தி நிறுவனம் கூறுகின்றது.

மேலும், 1 லட்சம் மை குடுவைகளுக்கான விலை இந்திய மதிப்பில் 8 கோடி (மலேசிய மதிப்பில் 4.8 மில்லியன்) என்றும் எச்.ஏ.வெங்கடேஸ் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, 14-வது பொதுத்தேர்தலுக்காக, சபாவில் உள்ள ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் முன்பதிவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்பதிவுகள் அனைத்தும் ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு இடையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

எனவே, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கு இடையில் பொதுத்தேர்தல் நடைபெறலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.