Home இந்தியா ஸ்ரீதேவியின் நல்லுடலை குடும்பத்திடம் ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி!

ஸ்ரீதேவியின் நல்லுடலை குடும்பத்திடம் ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி!

1245
0
SHARE
Ad

துபாய் – மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடலை பதப்படுத்தி, அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் காவல்துறை அனுமதி வழங்கியிருப்பதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.

அதற்கான அனுமதிக் கடிதத்தை துபாய் காவல்துறை, துபாயில் உள்ள இந்தியத் தூதரகத்திடமும், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினரிடமும் வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

இதனையடுத்து, இன்று நள்ளிரவோ அல்லது நாளை காலையோ ஸ்ரீதேவியின் நல்லுடல் மும்பை கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.