Home கலை உலகம் “ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்?” – போனி கபூர் உருக்கம்!

“ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்?” – போனி கபூர் உருக்கம்!

1155
0
SHARE
Ad

மும்பை – துபாய் தங்கும்விடுதியில், குளியலறைத் தொட்டியில் மூழ்கி மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் நேற்று புதன்கிழமை மும்பையில் அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் உருக்கமான கடிதம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

#TamilSchoolmychoice

“ஒரு நல்ல தோழியை, மனைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயை இழப்பது என்பதன் வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

எங்களது உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், ஶ்ரீதேவியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் என எல்லாருக்கும் எனது நன்றி. இந்த நேரத்தில் எனக்கும் என் மகள்களுக்கும், அர்ஜுன் மற்றும் அஷூலா மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அதற்காக நான் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத திடீர் இழப்பை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து கடந்து வர எங்களது மொத்த குடும்பமும் முயற்சி செய்கிறது.

உலகிற்கு ஒரு நிலவு போல் இருந்தார் ஸ்ரீ, அவர்களுக்கு ஒரு சிறந்த நடிகையாக, ஆனால் எனக்கு காதலியாக, தோழியாக, எனது பிள்ளைகளுக்கு தாயாக இருந்தார். எங்களது மகள்களுக்கு எல்லாமுமாய் இருந்தார். அவர்கள் வாழ்க்கையில். எங்களது குடும்பம் சுழல்வதற்கு ஒரு அச்சாணியாக இருந்தார்.

சினிமா நட்சத்திரங்களின் நினைவலைகள் எப்போதும் மறையாது. அவர்கள் எப்போதுமே வெள்ளித்திரையில் பிரகாசித்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு நடிகையாக அவர் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஸ்ரீதேவியிடம் பேச வேண்டுமென்றால், அவருடனான உங்களது சிறந்த நினைவுகளே வழி நடத்திச் செல்லும். இனி எங்களுக்கு கொஞ்சம் தனிமை தேவை. அதற்கு மரியாதை அளிக்க வேண்டுமென தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

இனி எனது மகள்களைப் பாதுகாக்க வேண்டும். ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்த வேண்டும் என்பதில் தான் எனது கவலை இருக்கின்றது. அவர் தான் எங்களது வாழ்க்கை, பலம் மற்றும் நாங்கள் சிரிப்பதற்குக் காரணமானவர். அளவுகடந்து நாங்கள் அவரை நேசித்தோம்.

அமைதி கொள் என் அன்பே.இனி நமது வாழ்க்கை இப்படி இருக்காது” – இவ்வாறு போனி கபூர் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.