எனினும், நஸ்ரி மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்படும் என லியாவ் குறிப்பிடவில்லை.
“குவோக்கை அவமதித்து, கண்டனம் தெரிவித்த நஸ்ரியின் செயலில் நாங்கள் அதிருப்தியடைந்திருக்கிறோம். அவர் தனது செயலுக்காக விளக்கமளிக்க வேண்டும்”
“இதை தான் மக்கள் விரும்புகின்றனர். ஆனால் நஸ்ரிக்கு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லை” என நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கிள்ளானில் நடைபெற்ற கூட்டமொன்றில் லியாவ் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்திருந்த நஸ்ரி, தனது கருத்துக்கு மசீச-விடம் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.