Home நாடு மசீச-விடம் மன்னிப்புக் கேட்கமாட்டேன் – நஸ்ரி திட்டவட்டம்!

மசீச-விடம் மன்னிப்புக் கேட்கமாட்டேன் – நஸ்ரி திட்டவட்டம்!

842
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் விவகாரத்தில், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர்  முகமட் நஸ்ரி அசிஸ் கூறிய கருத்து தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியான மசீச-வில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மலேசியாகினி பேட்டி ஒன்றில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் நஸ்ரி, தான் கூறிய கருத்திற்காக மசீச கட்சியிடம் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

மசீச உட்பட தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளிடையே, ஒரு நல்ல முதிர்ச்சியான உறவு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் நஸ்ரி, தான் கூறிய கருத்து தங்களது சகோதர உறவில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.