Home நாடு தேர்தல் பிரச்சாரத்திற்கு 21 நாட்கள் ஒதுக்க வான் அசிசா கோரிக்கை!

தேர்தல் பிரச்சாரத்திற்கு 21 நாட்கள் ஒதுக்க வான் அசிசா கோரிக்கை!

909
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலுக்கான, தேர்தல் பிரச்சார கால அளவை குறைந்தது 21 நாட்களாக நீட்டிக்கும் படி, எதிர்கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மக்களைச் சென்றடைய அனைத்து வேட்பாளர்களுக்கும் நிறைய காலம் தேவைப்படுவதாக வான் அசிசா குறிப்பிட்டிருக்கிறார்.

“நமக்கு இப்போது நிறைய வாக்காளர்கள் இருக்கிறார்கள். எனவே தேர்தல் பிரச்சார கால அளவு குறைவாக இருப்பது முறையானதாக இல்லை” என வான் அசிசா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

கூட்டரசு அரசியலமைப்பு பிரிவு 55-ம் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் 60 நாட்களுக்குள் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தலாம் என்றும் வான் அசிசா குறிப்பிட்டிருக்கிறார்.