Home இந்தியா சசிகலாவிற்கு 10 நாட்கள் பரோல்!

சசிகலாவிற்கு 10 நாட்கள் பரோல்!

919
0
SHARE
Ad

பெங்களூர் – சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே.சசிகலாவிற்கு, சிறை நிர்வாகம், 10 நாட்கள் பரோல் (தற்காலிக விடுப்பு) வழங்கியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானதையடுத்து, சசிகலாவிற்கு இந்தத் தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, பெசண்ட் நகரில் வைக்கப்பட்டிருக்கும் ம.நடராஜனின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.