Home நாடு கேஎல்சிசி அருகே மரம் சாய்ந்து படுகாயமடைந்த நபர் மரணம்!

கேஎல்சிசி அருகே மரம் சாய்ந்து படுகாயமடைந்த நபர் மரணம்!

1116
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த மார்ச் 5-ம் தேதி, ஜாலான் அம்பாங், கேஎல்சிசி அருகே, மரம் ஒன்று வேறோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற தம்பதி படுகாயமடைந்தனர்.

உடனடியாக அங்கிருந்தவர்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், அவர்களை மீட்டு, கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், தம்பதியரில் அந்த ஆடவர், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார் என மருத்துவமனை அறிவித்திருக்கின்றது.

#TamilSchoolmychoice