Home உலகம் ரஷியா வணிக வளாக தீ விபத்து – 53 பேர் பலி!

ரஷியா வணிக வளாக தீ விபத்து – 53 பேர் பலி!

985
0
SHARE
Ad

சைபீரியா – ரஷியாவின் சைபீரியா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 53 பேர் பலியாகியிருக்கின்றனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அந்த வணிக வளாகத்தில் நிறைய பேர் கூடி இருந்தனர். இந்நிலையில் திடீரென தீப்பற்றியது.

இதனையடுத்து, பலரும் அங்கிருந்து அவசரமாக வெளியேற முயன்றனர். என்றாலும் தீ மிக விரைவில் வணிக வளாகத்தின் ஒரு பகுதி முழுவதையும் பற்றிக்கொண்டது. இதனால் பலர் அதன் உள்ளே சிக்கிக் கொண்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

#TamilSchoolmychoice

எனினும், கரும்புகையில் சிக்கி பலர் மூச்சுத் திணறி மரணமடைந்தனர். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தனர்.

இன்னும் 40 குழந்தைகள் உட்பட பலரைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.