Home நாடு நாடாளுமன்றத்திலும், துகு நெகாராவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

நாடாளுமன்றத்திலும், துகு நெகாராவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

1207
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, தொகுதி எல்லை சீர்திருத்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படுவதை எதிர்த்து, பெர்சே அமைப்பைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், துங்கு நெகாராவில் ஒன்று கூடியிருக்கின்றனர்.

இதனையடுத்து, துகு நெகாரா (தேசிய நினைவுச்சின்னம்) மற்றும் நாடாளுமன்றத்தில் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இன்று காலை 8 மணியளவில் துங்கு நெகாராவிற்கு வந்த பெர்சே அமைப்பினர், கைகளில் பதாகைகளுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.