பெய்ஜிங் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். வடகொரிய அதிபராக இது அவருக்கு முதல் பயணமாகும். எனவே அவரது பயணம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இன்று புதன்கிழமை வரையிலான கிம் ஜோங் உன்னின் இந்தப் பயணத்தில், கிம்மிற்கும், அவரது மனைவி ரி சோல் ஜுவிற்கும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“கொரிய தீபகற்பத்தில் அமைதியையும், மரியாதையையும் நிலைநாட்டவும், இரு நாடுகளுக்கும், இரு தரப்பிற்கும் இடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்காகவும் பொதுச்செயலாளர் ஜீ ஜின்பிங்குடன் நான் நடத்தி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது” என கிம் கூறியிருக்கிறார்.