கோலாலம்பூர் – இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி, 1.6 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு வழங்க விருக்கும் சம்பள உயர்வு இரட்டிப்பு ஆக்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை நடைபெற்ற அரசாங்க ஊழியர்கள் முதன்மைக் கூட்டத்தில் அறிவித்தார்.
“அரசாங்கத்தின் மீதான உங்களின் நம்பிக்கை, ஆதரவு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக இது (சம்பள உயர்வு) வழங்கப்படுகின்றது.
“மக்களுக்கு சேவையாற்ற அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு அளித்தீர்கள். மக்கள் பயனடையும் வகையில் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை செயல்படுத்த உதவினீர்கள். அதற்காக உங்களின் சேவையை அங்கீகரிக்க அரசாங்க இந்த கூடுதல் சம்பள உயர்வு வழங்குகிறது” என நஜிப் கூறினார்.
இந்தக் கூடுதல் சம்பள உயர்வு அரசாங்கத்திற்கு 1.4 பில்லியன் ரிங்கிட் நிதி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.