Home வணிகம்/தொழில் நுட்பம் தேர்தலை முன்னிட்டு விமான மாற்றக் கட்டணம் தள்ளுபடி – ஏர் ஆசியா அறிவிப்பு!

தேர்தலை முன்னிட்டு விமான மாற்றக் கட்டணம் தள்ளுபடி – ஏர் ஆசியா அறிவிப்பு!

1191
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதனையடுத்து, ஏர் ஆசியா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதாவது, மே 9-ம் தேதி முன்பதிவு செய்திருக்கும் மலேசியர்கள், அதனை வேறு தேதிகளுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம் என்றும், அதற்கு விமான மாற்றக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது.

அதேவேளையில், இந்தத் தள்ளுபடி மலேசியக் குடிமகன்களுக்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மே 9-ம் தேதி, டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கீழ்காணும் இரண்டு வழிமுறைகளில் அதனை மாற்றிக் கொள்ளலாம்:

வழிமுறை 1: முன்பதிவு செய்திருக்கும் அனைத்து டிக்கெட்டுகளையும், அந்தத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வேறு ஒரு தேதிக்கு, ஒரே ஒரு முறை விமான மாற்றக் கட்டணம் இன்றி மாற்றிக்கொள்ளலாம். எனினும், நீங்கள் மாற்றம் செய்யும் தேதியில் உள்ள விமானத்தில், இருக்கையின் எண்ணிக்கை, கட்டண மாற்றம் அல்லது வரி மாற்றம் ஆகியவை உங்களின் தேர்வைப் பொறுத்தது.

வழிமுறை 2: அன்றைய நாளில் நீங்கள் முன்பதிவு செய்த பயணத்திற்கான கட்டண மதிப்பை அப்படியே ஏர் ஆசியா பிக் லாயல்டி அட்டைக்கு மாற்றிக் கொண்டு, எதிர்காலப் பயணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். என்றாலும், அட்டையில் கட்டண மதிப்பு மாற்றம் செய்யப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் அதனைப் பயன்படுத்திவிட வேண்டும்.

இவ்வாறு ஏர் ஆசியா தெரிவித்திருக்கிறது. இது குறித்த மேல் விவரங்களுக்கு https://www.airasia.com/en/home.page?cid=1 அகப்பக்கத்தை வலம் வரலாம்.