Home நாடு புத்ரா ஜெயா: பக்காத்தான்-பெர்சாத்து வேட்பாளர் டத்தோ சாம்சு அடாபி மாமாட்

புத்ரா ஜெயா: பக்காத்தான்-பெர்சாத்து வேட்பாளர் டத்தோ சாம்சு அடாபி மாமாட்

830
0
SHARE
Ad
டத்தோ சாம்சு அடாபி மாமாட்

புத்ரா ஜெயா – நடப்பு புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான தெங்கு அட்னானை எதிர்த்து தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ரஷிட் பெர்சாத்து கட்சியின் சார்பாக நிறுத்தப்படுவார் என முன்பு வெளியான ஆரூடங்கள் பொய்த்துள்ளன.

இன்று பெர்சாத்து கட்சி அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலின்படி புத்ரா ஜெயா தொகுதியில் பெர்சாத்து-பக்காத்தான் கூட்டணியின் வேட்பாளராக தேசியப் பல்கலைக் கழகத்தின் (UKM – Universiti Kebangsaan Malaysia) முன்னாள் விரிவுரையாளர் டத்தோ சாம்சு அடாபி மாமாட் நிறுத்தப்படுகிறார்.